fbpx
Connect with us

Cinemapettai

சீதக்காதி யார்.. விஜய்சேதுபதி தேர்ந்தெடுத்த சரியான ஆள் இவர்தான்..

News | செய்திகள்

சீதக்காதி யார்.. விஜய்சேதுபதி தேர்ந்தெடுத்த சரியான ஆள் இவர்தான்..

விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் சீதக்காதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. அந்த கதாபாத்திரத்தின் தகவலொன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வளர்ந்து வருபவர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி படத்தை அனைவரும் திரையில் காண எதிர்பார்த்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் பிரபலங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

seethkathi

விஜய்சேதுபதி முதல்முறையாக வயதான தோற்றத்தில் நடிக்கிறார், இவரது வித்தியாசமான நடிப்பு மக்கள் மனதில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவர் தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சூது கவ்வும், பீட்சா,போன்ற படங்கள் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்தன.

இதில் அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரம் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் டிரைலரை அய்யா என்னும் கதாபாத்திரம் யார்? அவர் ஏன் சினிமாவில் நடிக்க வரவில்லை? போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பல சர்ச்சைகள் அவர் சந்திப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் விஜய் சேதுபதி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருப்பார். விஜய்சேதுபதி நான் சரித்திரமாக மாறி விட்டேன் என்று கூறுவது போல டிரைலர் முடிவடைகிறது. இதுபோன்று தனது கெத்தான வசனத்தை படத்தில் பேசியுள்ளார். இப்படம் அடுத்த மாதம் இருபதாம் தேதி திரையில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதினாறாம் நூற்றாண்டில் பிறந்த சீதக்காதி மிகப்பெரிய வள்ளலாக திகழ்ந்திருக்கிறார். கீழக்கரையில் பெரியதம்பி மரைக்காயருக்கும், முகம்மது பாத்திமாவுக்கும் பிறந்த இவரது இயற்பெயர் செய்கு அப்துல் காதி.

சீதக்காதியின் முன்னோர்கள் கப்பல்களில் வெளிநாடுகளுக்குச் சென்று வணிகம் செய்த மரக்கலராயர் மரபைச் சேர்ந்தவர்கள். செல்வம் நிறைந்த அவர்கள் கீழக்கரையின் நிர்வாகத் தலைமையாளர்களாக விளங்கினார்கள். முன்னோர்கள் வழியில் சீதக்காதியும் வணிகத்தில் ஈடுபட்டு சாதனை படைத்தார். அக்காலத்தில் வணிகம் செய்துவந்த ஆங்கிலேயர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். அவர்களுக்குத் தேவையான மிளகு, அரிசி வினியோகத்தை முழுஅளவில் இவரே செய்துவந்தார்.

ஒரு சமயம் திடீரென்று பயங்கர பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்களுக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காத சூழல் அப்போது சீதக்காதி தான் எல்லா மக்களையும் பசியாறு வைத்திருக்கிறார். தான் சேர்த்த செல்வத்தை அனைத்தையுமே இப்படி தானமாகவே வழங்கினார் சீதக்காதி.

சீதக்காதி தனக்கு இறுதி நாள் நெருங்குவதை உணர்ந்தார். தன் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த புலவர் படிக்காசுத் தம்பிரான் வருவார், அவரிடம் இந்த மோதிரத்தை கொடுத்து விடுங்கள் என்று இறக்கும் தருவாயிலும் கூட தானமாக வழங்க வேண்டியதைப் பற்றியே சிந்தித்தார் சீதக்காதி.

சொன்னது போலவே சில தினங்களில் சீதக்காதி மறைந்திட அவரது சடங்கு சம்பிரதாயங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top