Connect with us
boomerang-movie

தனது சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி! எவ்வளவு தெரியுமா?

vijay-sethupathi

News | செய்திகள்

தனது சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி! எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக நடித்து பின்பு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனானவர் நடிகர் விஜய் சேதுபதி.

இவரது புதிய புதிய கதைக் களங்களும், எதார்த்த நடிப்பும் இவருக்கு அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துக் கொடுத்தது. விஜய் சேதுபதிக்கு மாதம் ஒரு படம் வெளிவரும் என்று சொல்லுமளவில் படு பிசியாக பல படங்களில் நடித்துக் கொண்டே இருக்கிறார்.

இவர் இதுவரை வாங்கிக்கொண்டிருந்த சம்பளம் 5 கோடி. ஆனால் தற்போது விக்ரம் வேதா திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது, அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த புரியாத புதிர் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படி தொடர் வெற்றி கிட்டியதால் தனது சம்பளத்தை 5 கோடியிலிருந்து ஒரேயடியாக 9 கோடி என உயர்த்திவிட்டாராம் விஜய் சேதுபதி. இருப்பினும் விஜய் சேதுபதி எவ்வளவு உயர்த்தினாலும் அவர் நடித்தால் போதும் என்று அவரை முழுமையாக நம்புகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: 4 கோடி சம்பளம் உயர்த்திடிங்களா! இங்க 4 ஆயிரம் ரூபாய் இன்கிரிமென்ட் வாங்குறதுக்கு ஒவ்வொரு மனுசனும் நாயா பேயா கெஞ்ச வேண்டியிருக்கு. எப்படியோ நல்லா இருந்தா சரி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top