fbpx
Connect with us

Cinemapettai

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் தலை சுற்ற வைக்கும் சம்பளம்.. விஜய்க்கு நிகரான வில்லன் என்றால் சும்மாவா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் தலை சுற்ற வைக்கும் சம்பளம்.. விஜய்க்கு நிகரான வில்லன் என்றால் சும்மாவா

தமிழ் சினிமாவில் மிகவும் அடிப்பட்டு மிதிபட்டு மேலே வரும் நடிகர்ககளை ரசிகர்கள் கொண்டாடுவது வாடிக்கைதான், அந்த வகையில் விஜய்சேதுபதிக்கு முக்கியமான இடம் உண்டு.

கூத்துப்பட்டறை மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் விஜய் சேதுபதி, ஆரம்ப காலத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி தற்போது முன்னணி நடிகர்களுக்கு நிகராக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

அதாவது கதாநாயனாக நடிப்பதை விட வில்லன் கதாபாத்திரத்தில் மிகவும் பொருந்தி விட்டது. விக்ரம் வேதா படத்தின் மூலம் நெகடிவ் கதாபாத்திரம் இவருக்கு 100 சதவீத வெற்றியை கொடுத்தது என்றே கூறலாம்.

இந்த வகையில் 7 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த விஜய்சேதுபதி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு 12 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். இனி இவர் ஹீரோவாக நடிப்பதாக இருந்தால் இன்னும் அதிக சம்பளம் பெறுவார் என்று தயாரிப்பாளர்கள் பயத்தில் உள்ளனர்.

விஜய் சேதுபதியை வைத்து போட்ட காசை எடுத்து விடலாம், அந்த அளவிற்கு அவர் நடிப்பின் மீது தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. மாஸ்டர் படத்தில் தளபதியை எதிர்த்து வில்லனாக களம் காணும் விஜய் சேதுபதியை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

விரைவில் டீசர் அல்லது ட்ரைலர் வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் தளபதி ரசிகர்கள்.

Continue Reading
To Top