25 வருடம் சிறை போதுமே ! – படத்தை தாண்டி ஒரு பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி படத்தை தாண்டி ஒரு பிரச்சனைக்காக குரல் கொடுத்திருக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 வருடங்களாக தனிமைச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்காக ஜூன் 11ஆம் தேதி வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை பிரம்மாண்ட பேரணி நடைபெறவுள்ளது.

இவர்களின் விடுதலைக்கு அண்மையில் நடிகர் சத்யராஜ் குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில் இவர்களுக்காக விஜய்சேதுபதியும் குரல் கொடுத்துள்ளார்.

25 வருடம் சிறை என்பது கொடுமையான விஷயம். அவர்களுக்காக நடக்கும் இந்த பேரணியில் நாம் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், அதோடு பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Comments

comments

More Cinema News: