Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ படத்தை நெல்லையில் வெளியிட தடை
Published on
விஜய் சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தை நெல்லை மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சங்கத்தமிழன். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வெள்ளி கிழமை வெளியாக உள்ள நிலையில், 2013ம் ஆண்டு ரூ.15 லட்சம் வழங்க வேண்டியது தொடர்பாக விநியோகஸ்தர் விக்னேஸ்வரன் ் வியாழக்கிழமை வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து நெல்லை நீதிமன்றம் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தை நெல்லையில் மட்டும் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது.
இதன்படி நவம்பர் 15 முதல் நவம்பர் 21 வரை நெல்லை மாவட்டத்தின் உள்ள திரையரங்குகளில் ’சங்கத்தமிழன்’ படத்தை வெளியிட தடை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
