விஜய் சேதுபதி ஹீரோ இல்லை, நடிகர் என்பதை படத்துக்கு படம் நிரூபித்து வருகிறார். தனக்கு ஏற்ற பிடித்த கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனாலேயே இந்தியா முழுவதும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என விஜய் சேதுபதி நினைத்திருந்தால் சில தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்த போதே அவரது கேரியர் காலியாகியிருக்கும். ஆனால் விருப்பப்பட்ட கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவரை இந்த அளவு உயர்த்தியுள்ளது.
தமிழிலிருந்து ஹிந்திக்கு போன நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி மாறியுள்ளார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் மும்பைக்கார் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார்.
முன்னதாக விஜய்சேதுபதி மும்பைக்கார் படத்தில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் எந்த மாதிரி கதாப்பாத்திரம் என்பது யாருக்கும் புலப்படாமல் இருந்தது. எல்லோருமே வில்லன் கதாபாத்திரத்தை தான் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
ஆனால் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் விஜய் சேதுபதி காமெடி நடிகர் முனீஷ்காந்த் மாநகரம் படத்தில் நடித்த வேடத்தில் நடித்துள்ளார். இதற்கான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.

மாஸ் ஹீரோவாக இருப்பவர் எப்படி ஒரு காமெடி ரோலில் நடிக்க ஒத்துக் கொண்டார் என பலரும் தற்போது சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கெல்லாம் அவரது நடிப்பு பதில் சொல்லும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.