Connect with us
boomerang-movie

விஜய்சேதுபதியின் படங்களுக்கு ‘U’ சர்டிபிகேட்

News | செய்திகள்

விஜய்சேதுபதியின் படங்களுக்கு ‘U’ சர்டிபிகேட்

vijaysethupathiகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’ படத்தில் ஜோடியாக நடித்த விஜய்சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள திரைப்படம் ‘சேதுபதி’. விஜய்சேதுபதி முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படம் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டது.

நேற்று ‘சேதுபதி’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு எவ்வித தடங்கலும் இன்றி ‘U’ சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் ”U’ சர்டிபிகேட் பெற்ற நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த படமும் அதே ‘U’ சர்டிபிகேட் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top