Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி வெளியிட்ட வரலக்ஷ்மி சரத்குமாரின் ‘வெல்வட் நகரம்’ பர்ஸ்ட லுக் போஸ்டர் !
சமீப காலமாக வரலக்ஷ்மி அதிகம் படங்களில் கமிட் ஆகி வருகிறார். விஷாலின் சண்டோக்கோழி 2 , எச்சரிக்கை, கன்னிராசி, விஜய்-62, மிஸ்டர் சந்திரமௌலி, நீயா-2 , பாம்பன் என பல படங்களை கையில் வைத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
‘வெல்வட் நகரம்’
அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் இயக்கும் இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய சைகாலஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் ஜானர் படமாம். 8 வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கதையை உருவாகியுள்ளாராம் இயக்குனர். பழங்குடி மக்களின் உரிமைக்காக போராடும் கதாபாத்திரம் தான் ஹீரோயின்.
இப்படத்தின் வரலட்சுமி சரத்குமார் “உஷா” என்ற ஜெர்னலிஸ்டாக நடிக்கிறாராம். மேலும் ரமேஷ் திலக், சூப்பர் சிங்கர் மாளவிகா, அர்ஜை முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். உறுமீன், யானும் தீயன் படப்புகழ் அச்சு ராஜாமணி இசை. மேக்கர்ஸ் ஸ்டுடியோ என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இன்று காலை 11 மணிக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
