ரேணிகுண்டா படத்தின் மூலம் 2009ம் ஆண்டு அறிமுகமான இயக்குனர் திரு. R. பன்னீர்செல்வம். அந்த படத்திற்கு பிறகு 18 வயசு என்ற படத்தை இயக்கினார். இது தோல்வியடைந்ததை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியை வைத்து கருப்பன் என்னும் படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தின் first லுக் போஸ்டர்கள் வெளியானதை வைத்து இது முழுக்க முழுக்க கிராமிய பின்னணியில் அதுவும் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம் என்பது தெரிகிறது.

அதிகம் படித்தவை:  தர்மதுரை பிரம்மாண்ட முதல் நாள் வசூல் - விஜய் சேதுபதிக்கு இது தான் அதிகம் !

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்சன் வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் பாடல் வெளியீடு விரைவில் நடக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அதிகம் படித்தவை:  Dharmadurai Teaser

இந்த படத்தின் இயக்குனர் இதற்கு முன் இயக்குனர் லிங்குசாமி அவர்களிடம் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இந்த படம் பல வருசமா எடுத்து எடுத்து நிப்பாட்டி நிப்பாட்டி கடைசியா இப்போதான் ஒருவழியா முடிஞ்சுருக்கு.

90. அந்த காலத்து நடிகைகளின் கவர்ச்சி கேலரி!!! பார்ட் 2