பொங்கலுக்கு விஜய் சேதுபதியின் புரியாத புதிர் படம் வெளியாக உள்ளது. விஜய்யின் பைரவாவுடன் புரியாத புதிர் மோதுகிறது.

பொங்கலுக்கு விஜய்யின் பைரவா படம் மட்டும் சோலோவாக ரிலீஸாகவிருந்தது. இந்நிலையில் பொங்கல் ரேஸில் படங்கள் லைன் கட்டி நிற்கின்றன.
பொங்கலுக்கு மேலும் ஒரு படமும் ரிலீஸாக உள்ளது. பைரவாவுடன் வருகிறோம் என ஜி.வி. பிரகாஷ் தனது புரூஸ் லீ படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
பொங்கலுக்கு பைரவா, புரூஸ் லீ, சி.வி. குமாரின் அதே கண்கள், அருண் விஜய்யின் குற்றம் 23, ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகள், கிருஷ்ணாவின் யாக்கை ஆகிய ஆறு படங்கள் ரிலீஸாவிருந்தன.
இந்த சூழலில் விஜய் சேதுபதியின் புரியாத புதிர் படமும் பொங்கலுக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சூர்யாவின் எஸ் 3 படமும் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என்று கூறப்படுகிறது. பொங்கலுக்கு என் கடம்பனும் வெளியாகும் என ஆர்யாவும் சும்மா பிட்டு போட்டு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.