Connect with us

Cinemapettai

இப்போ இவர் வேற லெவல்! -பிரம்மாண்ட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி ?

Cinema News | சினிமா செய்திகள்

இப்போ இவர் வேற லெவல்! -பிரம்மாண்ட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி ?

vijay-sethupathiபிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் அனேகன் படத்திற்கு பின்னர் இன்னும் யாருடைய படத்தை இயக்குவது என்பதை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய்சேதுபதி தற்போது ஏற்கனவே கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் கே.வி.ஆனந்த் கூறிய கதை ஒன்று அவரை கவர்ந்ததாகவும், இந்த படத்தில் நடிக்க அவ்ர் உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், வரும் ஆகஸ்ட் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் இந்த தகவல்கள் அனைத்தும் இன்னும் படக்குழுவினர்களால் உறுதிப்படுத்தப்படவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top