fbpx
Connect with us

விஷ்ணு விஷால் படத்தில் விஜய் சேதுபதி

vijay-sethupathi-act-in-vishnu-vishal-kadhanayagan_secvpf

News | செய்திகள்

விஷ்ணு விஷால் படத்தில் விஜய் சேதுபதி

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் தயாரித்து, நடிக்கும் படம் ‘கதாநாயகன்’. இப்படத்தை முருகானந்தம் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடிக்கிறார். சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழ்நிலையில், தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இவர் வரும் காட்சியை சமீபத்தில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் தயாரிப்பாளரான முருகானந்தம் ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘காஷ்மோரா’ ஆகிய படங்களில் முக்கியமான காட்சிகளில் நடித்துள்ளார். இவர் இயக்குனராகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது ‘மாவீரன் கிட்டு’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top