யாருக்கு வெற்றி, யாருக்கு படம் புக் ஆவது, யாருக்கு எந்த டைரக்டர் என போட்டி போட்டு கொண்டிருக்கும் இந்த காலத்தில் இப்படியும் ஒருத்தர் இருந்தால் நல்லாத்தான் இருக்கும்.. தன் எதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி.

தளபதி பிரபுவின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் கெளரவ்வின் ‘இப்படை வெல்லும்’, ப்ரியதர்ஷன் படம் ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ புகழ் மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம்.

அதிகம் படித்தவை:  3 நாட்களில் இத்தனை கோடி வசூலா? அசத்திய இறைவி

udhayanithiடி.இமான் இசையமைத்து வரும் இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். இப்போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.

தற்போது இப்படை வெல்லும் படத்திற்காக வாய்ஸ்ஓவர் கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி. அதற்காக கடந்த சில நாட்களாக ஒலிப்பதிவு நடந்துள்ளது. இயக்குனர் கவுரவ் இந்த படத்தை இயக்கிவருகிறார்.

அதிகம் படித்தவை:  வெளியானது விஜய் சேதுபதி, சீனு ராமசாமி, யுவன், இளையராஜா இணையும் புதிய பட அறிவிப்பு. போட்டோ உள்ளே.

விஜய் சேதுபதி அடுத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா புகழ் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக வனமகன் புகழ் சயீஸா நடிக்கவுள்ளார்.