fbpx
Connect with us

மணிரத்னம் வலையில் சிக்கிய விஜய்சேதுபதி! இனி வேற வழியே இல்ல..

News / செய்திகள்

மணிரத்னம் வலையில் சிக்கிய விஜய்சேதுபதி! இனி வேற வழியே இல்ல..

எப்ப பார்த்தாலும் இந்த விஜய்சேதுபதி ஒரே மாதிரி நடிக்கிறார்ப்பா! என்ற விமர்சனங்கள் மாறும் நிலை வந்துருகிறது. ஆனால் அவரை வைத்து வேறு மாதிரி எடுக்க மத்த இயக்குனர்களாலும் முடியலை. விஜய்சேதுபதியும் நடிப்பை மாற்றுவதா இல்லை. இப்ப அதுக்கு ஒரு முடிவு..

vijaysethupathiஅண்மைகால மணிரத்னம் படங்களுக்கும் ஆரம்ப கால மணிரத்னம் படங்களுக்கும் குறைந்த பட்ச வித்தியாசமே 100 க்கும் மேல்! ‘நம்ம படம் எவனுக்கும் புரியவும் கூடாது. புரிஞ்சாலும் ஓடவே கூடாது’ என்பது போலவே படமெடுத்து வருகிறார். அதுவும் எங்கோ வட மாநிலத்தில் ஷுட்டிங் நடத்தி, அதையும் திருநெல்வேலி என்று நம்மை நம்பச் சொல்கிற அசட்டுத் துணிச்சல் வேறு எந்த இயக்குனருக்கும் வராது.

சீட்டுக்கட்டில் ‘கிங்’ பழசானாலும், கிராக்கி கிராக்கிதானே? இன்றைய தினத்திலும் அவர்தான் நம்பர் ஒன் இயக்குனர். பழைய சாதனைகளுக்காக கொடுக்கப்பட்ட கிரடிட் இது. கமல் மாதவன் சூர்யா மாதிரி நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் ஹீரோக்களையே தன் படங்களில் நடிக்க வைக்க ஆசைப்படும் மிஸ்டர் மணி, முதன் முறையாக நம்ம அழுக்கு வேஷ விஜய் சேதுபதியை தன் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம்.

இதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகி, படு சுறுசுறுப்பாக போய் கொண்டிருக்கிறது. சுமார் இரண்டு வருஷங்களுக்கு டைட்டாக தேதிகளை கொடுத்து வைத்திருக்கும் மக்கள் செல்வன், மணிரத்னம் படம் கமிட் ஆகிவிட்டால் வேறு சிலருக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டுகளை உருவிக் கொடுக்கவும் பிளான் போட்டு வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top