Connect with us

Cinemapettai

கண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி.! ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா?

vijaysethupathy

Cinema News | சினிமா செய்திகள்

கண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி.! ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் இந்தியா பிலிம்பேர் அவார்ட் (IFFM Awards 2019) நடைபெற்றது. இதில் இந்திய அளவில் உள்ள முக்கிய படங்கள் போட்டியிட்டனர். விஜய் சேதுபதி நடித்து வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.

இந்த படத்தில் ஷில்பா என்ற கேரக்டரில் நடித்துள்ள விஜய் சேதுபதி திருநங்கையாக தனது முழு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவரின் உழைப்புக்கு ஏற்றவாறு இந்த விருதை பெற்றுள்ளார் என்றே கூறலாம். இந்த படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் பாராட்ட கூடியதாகவே இருக்கும்.

சிறந்த நடிகைக்கான விருதை தபு பெற்றார், சிறந்த படத்திற்கான விருதை Gully boy படக்குழுவினர் பெற்றுள்ளனர். விஜய் சேதுபதி பெற்ற இந்த வெற்றியை படக்குழுவினருக்கு சமர்ப்பிப்பதாக, அதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

vijaysethupathy-iifm

vijaysethupathy-iifm

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top