Tamil Cinema News | சினிமா செய்திகள்
கஜா புயல்.. களமிறங்கிய விஜய் சேதுபதி.. என்னென்ன செய்தார் தெரியுமா?
திரைத்துறையில் நீண்ட நாட்களாக தன் கடின உழைப்பால் தற்போது முன்னேறி முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழகத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

Vijay-Sethupathi
இவரது நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி எனும் படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இவர் விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார். விஜய் சேதுபதி பல படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் பல படங்களை கைவசப்படுத்தி உள்ளார். இப்படங்கள் அனைத்தும் திரைக்கு வர உள்ளன.
விஜய் சேதுபதி கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். அதில் 25 லட்சம் மதிப்புள்ள தேவையான பொருள்கள், டார்ச் லைட், சாப்பாடு உள்ளிட்ட பொருள்களை வழங்கி உள்ளார். பல நாட்களாக வளர்த்த தென்னை மரங்கள் வாழை மரங்கள் என நிறைய சேதங்கள் ஏற்பட்டுள்ளன எனவே அதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார் தேவையான இடத்தில் மரக்கன்றுகள் மூலம் உதவிகள் செய்து வருகிறார். ஏற்கனவே சிவகுமார், சூர்யா 50 லட்சம் நிதி வழங்கியுள்ளார்கள்.
