ஜீவா நடித்த “ரெளத்திரம்” படத்தை இயக்கியவர் கோகுல். அதன்பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தை இயக்கியவர் பின்னர் கார்த்தி நடிப்பில் “காஷ்மோரா” படத்தை இயக்கினர். அப்படி அவர் இயக்கிய மூன்று படங்களுமே பேசப்பட்ட படங்களாக அமைந்தன. இந்த நிலையில் தற்போது தனது நான்காவது படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் கோகுல்.

அந்த படம் குறித்து விசாரித்தபோது, தனது புதிய படத்தை விஜய்சேதுபதியை நாயகனாக வைத்து இயக்குகிறாராம் கோகுல். மேலும், இதற்கு முன்பு அவரை வைத்து இயக்கிய இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை போலவே இந்த படத்தையும் காமெடி கலந்த கதையில் இயக்குகிறாராம். அதனால் விஜய்சேதுபதியுடன் சில முன்னணி காமெடியன்களும் இணைகிறார்களாம். தற்போது நடித்துவரும் கருப்பன், அநீதி கதைகள் படங்களை முடித்த பிறகு இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பார் என்று தெரிகிறது.