இது பகைமை பாராட்டுவதற்கான தருணம் அல்ல என்று மெரினாவில் இடம் ஒதுக்காதது தொடர்பாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் காலமானார். கருணாநிதியின் இறுதிச் சடங்கின் போது சென்னையில் கூடியுள்ள கூட்டம் அவரது அரசியல் அண்ணனான அறிஞர் அண்ணா இறுதிச் சடங்குக்கு கூடிய கூட்டத்தை தாண்டியிருக்கும் என்று கூறுகிறது, தோராயமான ஒரு புள்ளிவிவரம்.

கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக போலீசார் தடியடி நடத்தினர். கட்டிடங்களின் மேல் தொண்டர்கள் ஏறி நின்று உள்ளே வர முயன்றனர். தொலை தூர கட்டிடங்களிலும் மேலே ஏறி மக்கள் கருணாநிதி வைத்திருக்கும் இடத்தை பார்த்தனர்.

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. மெரினாவில் இடம் ஒதுக்காததிற்கு விஜய் சேதுபதி எனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

இது குறித்து, “இது பகைமை பாராட்டுவதற்கான தருணம் அல்ல, தமிழகத்தின் முதல்வராக 5 முறை தேர்வு செய்யப்பட்டவர் என்ற முறையிலும் தமிழுக்கும் மக்களுக்கும் அவர் வாழ்நாள் முழுதும் சேவை செய்த தலைவர் என்ற வகையிலும் அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.