Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் திரைப்படத்தின் சஸ்பென்ஸை உடைத்த நெட்டிசன்கள்.. லீக்கான அப்டேட்டால் விரக்தியடைந்த விஜய் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் யாருமே தொட முடியாத உச்சத்தில் நாற்காலி போட்டு அமர்ந்திருப்பவர் தான் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது தளபதியின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்பது நாம் அறிந்ததே. மேலும் இதன் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

master
இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தை குறித்த தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது. அதாவது விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசாக தயாரான படம் தான் மாஸ்டர்.
ஏற்கனவே இந்த படத்தில் விஜய் ஒரு குடிகார ப்ரொஃபஸர் ரோலில் நடித்து வருவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது அவர் கண்பார்வை பாதிப்பு குறைவு கொண்ட கேரக்டரிலும் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது குடிப்பழக்கத்தின் காரணமாக கண் பார்வை பாதிக்கப்பட்ட ப்ரொஃபஸர் கேரக்டரில் தான் விஜய் இந்த படத்தில் நடித்துள்ளாராம்.
மேலும் இந்த படத்தை குறித்து இதுவரை வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் என அனைத்திலும் விஜய் கருப்பு கண்ணாடியை மட்டுமே அணிந்திருப்பார். இது நம்முடைய சந்தேகத்தை அதிகரிக்கிறது.
அது மட்டுமல்லாமல் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள கண் பார்வை குறைபாடு கொண்டவர்கள் படிக்கும் பள்ளியில் நடைபெற்றது என்ற தகவலும் கிடைத்துள்ளது.
எனவே, விஜய் இதுவரை நடிக்காத ஒரு புதிய கேரக்டரில் முதல் முதலாக நடித்து இருப்பதை ரசிகர்கள் பலர் ஆதரித்தாலும், சிலர் மாஸ்டர் திரைப்படத்தின் விஜய் கேரக்டர் லீக் ஆனதால் விரக்தி அடைந்துள்ளனர்.
