fbpx
Connect with us

Cinemapettai

பிகில் படத்தில் மகன் விஜய் பெயர் மைக்கேல்.. அப்பாவின் பெயர் இதுதானா.! செம மாஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் படத்தில் மகன் விஜய் பெயர் மைக்கேல்.. அப்பாவின் பெயர் இதுதானா.! செம மாஸ்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் அப்பா கேரக்டர் உள்ள விஜய்யின் பெயர் வெளியாகியுள்ளது. அந்த பெயர் பற்றின செய்திதான் இப்பொழுது பரவலாக பேசப்படுகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் விவேக் ,நயன்தாரா, யோகிபாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விஜய்யின் பிறந்த நாளன்று பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் வெளியாகின.

அதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அணிந்திருக்கும் ஜெர்ஸியில் மைக்கேல் என பெயர் உள்ளது. அதனால் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்யின் பெயர் மைக்கேல் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் இதில் அப்பாவாக நடித்திருக்கும் விஜய்யின் பெயர் வெளியாகியுள்ளது. அப்பாவின் பெயர் பிகில் எனக் கூறினர். ஆனால் பிகில் என்பது மகனாக நடிக்கும் விஜய்யின் செல்லப் பெயர் என சிலர் கூறுகின்றனர்.

அப்பாவின் பெயர் ராயப்பன் என்பது தான் உண்மை என்று ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அப்பா விஜய்யின் கெட்டப் மாஸ் ஆக இருக்கிறது என பலரும் கூறுகின்றனர். தற்போது இந்தப் பெயரும் கெத்தாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top