தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத பல சாதனைகளை ‘மெர்சல்’ படம் முறியடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ‘எந்திரன்’ பட வசூலை முறியடித்தது.

வெளிநாடுகளில் பல நாடுகளில் முதல் முறையாக அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் என்ற சாதனையை ஏற்கெனவே படைத்துள்ளது. இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் நேற்றும், நேற்று முன் தினமும் பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.

mersal

‘மெர்சல்’ திரைப்படம் 12 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை ஏற்கெனவே கடந்திருக்கிறது. படம் வெளிவந்து 18 நாட்கள் மேல் ஆகிவிட்டது. தற்போது வசூல் 250 கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இன்னும் சில நாட்களில் அந்த சாதனையையும் கடந்துவிடும். அதற்குப் பின் இருக்கும் மிகப் பெரிய சாதனை ‘எந்திரன்’ படத்தின் மொத்த வசூல். ‘எந்திரன்’ படத்தின் மொத்த வசூலாக சுமார் 280 கோடி தமிழ்த் திரையுலகத்தின் முதல் சாதனையாக இருந்தது.

அதிகம் படித்தவை:  தளபதி-63 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?

தமிழ்நாட்டில் ‘எந்திரன்’ சாதனையை முறியடித்தது போல மொத்த வசூலிலும் ‘மெர்சல்’ படம் முதலிடத்தைப் பிடிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

mersal

இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என போற்றப்படும் படம் பாகுபலி. உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்தது சாதனை படத்துள்ளது பாகுபலி.

சென்னை பாக்ஸ் ஆபீசிலும் இந்த படம் தான் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது. இந்த படத்தில் சாதனைய முறியடிப்பது மிகக்கடினமானது என்று பலர் சொன்னாலும் தற்போது மெர்சல் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

அதிகம் படித்தவை:  விஜய்யை விடாமல் துரத்தும் சங்கடம்

ஆம், தற்போது வரை 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது மெர்சல் படம். சென்னையில் ரோகினி தியேட்டரில் இதற்கு முன்பு பாகுபலி வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளது மெர்சல்.

mersal

ரோகினி தியேட்டரில் மட்டும் 6 ஸ்க்ரீன் உள்ளது. இந்த தியேட்டரில் மட்டும் பாகுபலி தனது வாழ்நாளில் வைத்த மொத்த கலெக்சனையும் 15 நாளில் தவிடு பொடியாக்கியுள்ளது மெர்சல்.

இரண்டு படத்திலும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் பாகுபலியின் இரண்டு பாகத்திற்கும் கதை எழுதினார். அவர் தான் மெர்சல் படத்திற்கும் திரைக்கதை எழுதியிருக்கிறார்.