Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு நடக்கும் மருத்துவ சோதனை.. புதுவித யோசனைக்கு அமெரிக்கா சென்றதன் ரகசியம்

அமெரிக்காவில் விஜய்க்கு நடக்கும் மருத்துவ பரிசோதனை.

vijay-cinemapettai-actor

Actor Vijay: லோகேஷின் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ படத்தில் விஜய் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் விஜய் திடீரென அமெரிக்கா சென்று உள்ளார். அவரது உடல் முழுக்க மருத்துவ சோதனை செய்ய உள்ளனராம். இதற்கான காரணம் என்ன என்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது வெங்கட் பிரபு தளபதி 68 படத்தை நல்ல தரத்துடன் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read : சங்கீதா விஜய் திருமண நாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை.. எரியுற நெருப்பில் பெட்ரோல ஊத்திட்டாங்க!

அதன் விளைவாகத்தான் தயாரிப்பு நிறுவனம் விஜய்யை அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். ஏற்கனவே அழகிய தமிழ்மகன், பிகில் போன்ற படங்களில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஆனால் தளபதி 68 படத்தில் முதியவராகவும், இளைஞராகவும் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக விஜய்யின் உடல் முழுவதும் ஸ்கேன் செய்யப் போகிறார்களாம். மேலும் படத்தில் இரண்டு விஜய்க்கும் வேற்றுமை தெரிய வேண்டும் அதோடு மட்டுமல்லாமல் கிராபிக்ஸ் அதிகமாக எடுக்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறார்களாம்.

Also Read : இந்தியன் 2க்கு போட்டியாக விஜய் செய்ய போகும் விஷயம்.. தளபதிக்காக சொல்லி அடிக்க தயாரான வெங்கட் பிரபு

ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய்யின் உடல் பரிசோதனை செய்து அதற்கேற்றார் போல் காட்சிகளைக் கொண்டு வர இருக்கிறார்கள். மேலும் தமிழ் சினிமாவில் இதுபோன்று ஹீரோக்களுக்கு இதுவரை யாரும் இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ள வில்லையாம்.

இவ்வாறு தளபதி 68 படத்திற்கு ஒவ்வொரு விஷயத்தையும் மெனக்கெட்டு செய்வதற்கான காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக இந்த படத்தை மாற்ற வேண்டும் என்ற ஒன்றுதான். மேலும் படக்குழு செய்யும் அனைத்திற்கும் விஜய்யும் ஒத்துழைப்பது பாராட்டக்கூடிய விஷயம்தான்.

Also Read : மதில் மேல் பூனையாக இருக்கும் விஜய்.. நம்பி அசிங்கப்பட போகும் தளபதி, அடித்து சொல்லும் பிரபலம்

Continue Reading
To Top