Tamil Cinema News | சினிமா செய்திகள்
யூ டியூப்பை அலற விட்டு, சாதனை படைத்த மாஸ்டர்.. வாத்தி செம்ம ரெய்டு!
தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் கோடை விடுமுறை 2020 க்கே வெளியாக இருந்த நிலையில் கொரானாவின் காரணமாக தள்ளிச் சென்று கொண்டே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோஹனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாஸ்டர் மஹேந்திரன் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி முன்னிட்டு சன் டிவியின் யூ ட்யூப் சானலில் இந்த டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சிலர் இது நம்மவர் ஸ்டைலில் உள்ளது, மலையாள பட சாயல் தெரிகிறது என்றெல்லம் பேசி வருகின்றனர். எனினும் மாஸ் ஸ்டைலிஷாக விஜயை காமித்துள்ள காரணத்தால் இந்த டீஸர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

master-teaser-record
விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி சாமானியன் ரசிகனுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை இந்த டீசர் அதிகரிக்க செய்துள்ளது. டீஸர் வெளியாகி இத்தனை நாட்கள் ஆகியும் யூ ட்யூபில் நம்பர் 2 ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுமட்டுமன்றி 30 மில்லியன் பார்வைsகளை கடந்துள்ளது. 2.3 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.
சன் டிவியின் யூ ட்யூப் சேனல், சட்டென்று 1 கோடி சந்தாதாரர்கள் என்ற மைல் கல்லை அடைவதற்கு இந்த டீசர் காரணமாக அமைந்துள்ளது.

master teaser
ட்ரைலர் வரும் பட்சத்தில் இன்னும் அதிக ரெகார்டுகளை உருவாக்குவான் இந்த மாஸ்டர் என்பது மட்டும் உறுதி.
