சாதனை படைக்கும் விஜய், யுவன் காம்போ விசில் போடு.. 48 மணி நேரத்தில் இவ்வளவு பார்வையாளர்களா?

Vijay : லியோ படத்தை தொடர்ந்து இப்போது விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

கோட் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. எப்போதுமே வெங்கட் பிரபுவின் படத்தில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார்.

இதில் விஜய் படங்களுக்கு அனிருத் இசை அமைத்து வந்த நிலையில் கோட் படத்தில் யுவன் இசையமைத்திருந்தார். அந்த வகையில் மதன் கார்கி பாடல் வரிகளில் விஜய்யின் குரலில் விசில் போடு என்ற பாடல் வெளியானது.

48 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வையாளர்கள்

இப்போது இணையத்தையே திணறடிக்கும் அளவிற்கு இந்த பாடல் ட்ரெண்ட்டாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோட் படம் சாதனை படைக்கும் என ஒரு டார்கெட் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் 12 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது. அதேபோல் இப்போது விசில் போடு பாடல் 48 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என டார்கெட் பிக்ஸ் செய்துள்ளனர்.

vijay-ags
vijay-ags

இப்போதே இந்த பாடல் வெளியாகி 17 மணி நேரம் ஆகியுள்ள நிலையில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. ஆகையால் கண்டிப்பாக இந்த சாதனையை கோட் பாடல் அடையும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்