விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள ‘மெர்சல்’ படம், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்கச் சொல்லி பாஜகவினர் வற்புத்திய விஷயம், மிகப்பெரிய அளவில் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் பரவிய இந்த விஷயம் குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி கூட கருத்து தெரிவித்துள்ளார்.

vijay

‘அரசியல்வாதிகள் சினிமாவை விடவேண்டும். படத்தைச் சேர்ந்த நட்சத்திரத்தை அறிக்கைகளால் தூண்டிவிட்டு, அவர்களை தலைவர்களாக மாற்றக்கூடாது. இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதல்களும், அறிக்கைகளுமே சினிமாவில் கவனம் வைத்திருக்கும் நட்சத்திரங்களை அரசியல் பக்கம் திருப்புகிறது.

அதை, தமிழகம் மீண்டும் தாங்காது’ என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

vijay murugadoss movie
vijay

இந்நிலையில், ‘விஜய் தலைவராகி, அவரை நம்பியுள்ள மக்களுக்கு நல்ல மாற்றத்தைத் தரவேண்டும்’ என விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சினிமாவை தாண்டி இப்போது தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது அரசியல். ரஜினி, கமல் குறித்து கடந்த சில மாதங்களாக அரசியல் பேச்சுகள் எழும்பி வருகின்றன.

கமல்ஹாசனும் வரும் நவம்பர் 7ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.விஜய்யும் அரசியலுக்கு வருகிறார் என்று நிறைய பேச்சுகள் எழும்புகின்றன.

vijay

இந்த நிலையில் விஜய்யின் நண்பர்கள் அவரின் அரசியல் பற்றிய எண்ணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.அதில் அவர்கள் விஜய்யின் படங்கள் வரும்போது மட்டும் சில அரசியல் சார்ந்த பிரச்சனைகள் வருகிறது.

இதுவே விஜய் அரசியலில் நுழைவதாக இருந்தால் ஒரு காரணமாக இருக்கலாம். விஜய் கூட அரசியல் வாதிகளின் செயல்களால் என்னை அரசியலுக்கு வர வைத்துவிடுவார்கள் போல என்று கூறுவார் என அவரது நண்பர்கள் விஜய்யின் அரசியல் எண்ணம் குறித்த கருத்தை கூறுகிறார்கள் விஜய்க்கு நெருங்கிய நண்பர்கள்.