இளையதளபதி விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்.

விஜய் ஆண்டனி இன்று அனைவரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராகிவிட்டார். அவரின் படங்கள் அனைத்தும் ஒரு அழுத்தமான கதையை எடுத்து வைக்கிறது.

அதிகம் படித்தவை:  தேசிய விருது வாங்கிய இந்த படத்தில் விஜய்தான் முதலில் நடிக்க வேண்டியது தெரியுமா?

இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது விஜயின் அப்பா இயக்குனர் சந்திரசேகரை அணுகினாராம். அவர் தன் சுக்ரன் படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினாராம்.

மேலும் அவரின் வழிகாட்டுதலின் படியே ஆண்டனி தொடர்ந்து சில படங்களுக்கு சில அமைக்க பின் நடிகரானார். அந்நேரத்தில் விஜய் ஆண்டனிக்காக தான் இருந்த சால்கிராமம் வீட்டை தங்குவதற்காக கொடுத்தாராம். இதில் பெரிய ஸ்டூடியோவும் உள்ளது.

அதிகம் படித்தவை:  ரஜினியின் 2.0 சாதனை இருக்கட்டும் பாஸ்.! விஜய்யின் இந்த சாதனையை பார்த்தீர்களா.!

சமீபத்தில் கூட சைத்தான் படவிழாவில் விஜய் ஆண்டனி பற்றி சந்திரசேகர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மேலும் விஜய் ஆண்டனியும் அவரை முன்னிலைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.