புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

திராவிட கட்சிகளுக்கு டஃப்.. சீமானுக்கு பதிலடி கொடுக்க விஜய் போட்ட புதிய திட்டம்

தவெக தலைவர் விஜய் புதிய சேனலை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகிறது.

கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய் அடுத்து அக்கட்சியின் கொடியையும், கொடிப்பாடலையும் அறிமுகம் செய்தார். அதன்பின்னர், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தவெகவின் முதல் மாநாடு வெற்றிக் கொள்கை திருவிழா என்ற பெயரில் நடந்தது.

இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றதாகத் தகவல் வெளியானது. இது விஜய் தன் பலத்தை நிரூபிக்க கூட்டிய மா நாடு என திமுக அமைச்சர்கள் விமர்சித்தனர். விஜய் தன் முதல் அரசியல் மாநாட்டில் திமுகவையும், பாஜவையும் கடுமையாக விமர்சித்த நிலையில், சீமானையும் சீண்டியிருந்தார்.

கட்சியைப் பலப்படுத்த சுற்றுப்பயணம்

இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என தவெகவினர் எதிர்பார்க்கவில்லை. அதனால் நாம் தமிழர் மாநாட்டில் விஜய்யையும், தவெகவின் கொள்கைகளையும் சரமாறியாகத் தாக்கிப் பேசியுள்ளார். இதற்கு விஜய் விரைவில் பதிலடி கொடுப்பார் எனவும், தவெகவை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும், கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியிலும் அவர் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என தகவல் வெளியாகிறது.

பொதுவாகவே திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து முன்னணி கட்சிகளுக்கும் சொந்தமாக சேனல்களும், ஆதரவு சேனல்களும் உள்ளன. இதனால் தவெக கட்சி ஆரம்பித்து, அனைத்து சோசியல் மீடியாவிலும் அதிகாரப்பூர்வ கணக்குகள் தொடங்கி, யூடியூப்பிலும் கட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி வரும் நிலையில், விஜய் புதிய சேனல் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

எனென்றால் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடுமா? அல்லது கூட்டணியா என்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை. ஆனால், கட்சியின் கட்டமைப்பு முக்கியம் என்பதால் இதை அனைத்து ஊராட்சி, நகராட்சி, மாவட்டம், மண்டலம் என அனைத்துப் பகுதிகளிலும் பிரபல கட்சிகளுக்கு இணையான வட்ட, ஒன்றிய, கிளை, மாவட்ட செயலாளர்கள், வாக்குச் சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நிர்வாகிகளை அனைத்து பொறுப்புகளில் நியமித்து கட்சியை அடுத்து வரும் தேர்தலுக்குள் தயார்படுத்த விஜய் திட்டமிட்டிருக்கிறார். அக்கட்சி பொ.செ., புஸ்ஸி ஆனந்த் இதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

புதிய சேனலை தொடங்கும் விஜய்

இதற்காக வரும் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக அவர் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். விரைவில் பயண விவரமும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், விஜய்யின் தவெக சமூக வலைதளங்களில் இருந்தாலும் இன்னும் கிராமப்புற மக்களுக்கு அக்கட்சியைக் கொண்டு சேர்க்க சேட்டிலைட்சேனல் தேவை என்பதால் விஜய் வெற்றி என்ற பெயரிலோ அல்லது TVK என்ற பெயரிலோ வாகை என்ற பெயரிலோ புதிய சேட்டிலைட் சேனலை தொடங்குவார் என தகவல் வெளியாகிறது.

விஜய் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளையும், பாஜவையும், நாம் தமிழர் கட்சியையும் சீண்டியதால் அக்கட்சிக்கு ஆதரவான சேனல்கள் விஜய்யின் தவெகவை ஊக்குவிக்காது என்பதால் அவர்களுக்கு எதிர்வினை கருத்துகளை கூட பரப்ப வாய்ப்புண்டு என்பதால்தான் விஜய் சொந்தமாக தனது கட்சி செயல்பாடுகள், கொள்கைகளை விவரிக்கும் வகையில் அப்புதிய சேனலில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி செய்திகளையும் வெளியிடவும், சீமானுக்கு பதிலடி கொடுக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News