Tamil Cinema News | சினிமா செய்திகள்
நேர்கொண்ட பார்வை படக்குழுவின் ரிலீஸ் யுக்தியை பின்பற்றுமா பிகில் படக்குழு ? பட ரிலீஸ் எப்போ
விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட படமே பிகில். பிகில் படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தளபதி விஜய் தன்னுடன் வேலை பார்த்த 400 ஊழியர்களுக்கு பிகில் பெயர் பொருத்தப்பட்ட மோதிரத்தை அன்பு பரிசாக வழங்கியது தான் லேட்டஸ்ட் அப்டேட். அடுத்ததாக வெறித்தனம் பாடல் லிரிகள் வீடியோ எப்பொழுது வெளியாகும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.
பொதுவாக படங்களை வெள்ளிக்கிழமை அல்லது பண்டிகை, விடுமுறை நாட்களில் வெளியிடுவது தான் வழக்கம். ஆனால் சமீபகாலமாக வியாழன் அன்று ரிலீஸ் செய்வதும் ட்ரெண்ட் ஆகி விட்டது. இந்நிலையில் இணையத்தில் பிகில் படத்தின் ரிலீஸ் பற்றிய செய்திகள் பரவி வருகின்றது.
சென்ற படம் சர்கார் தீபாவளி தினத்தில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் மழை குவித்தது. எனினும் இம்முறை தீபாவளி ஞாயிறு அன்று வருகின்றது (அக்டோபர் 27 ). அன்று படம் ரிலீஸ் செய்வது வியாபார நோக்கில் அந்தளவுக்கு உகந்தது இல்லை என்ற கருத்து கணிப்பு வந்துள்ளதாம். மேலும் தனுஷின் பட்டாஸ், அல்லது விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் போன்ற படங்கள் முன்னரே ரிலீஸ் ஆகும் பட்சத்தில் ஸ்க்ரீன் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். ஏனவே படத்தை அக்டோபர் 24ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்யவார்கள் என எதிர்பார்க்கின்றனர்.
Trade Buzz : #ThalapathyVijay's #Bigil is targeting an Oct 24, Thursday release. Pre-Diwali fireworks ? ? ..
Diwali falls on Sunday, Oct 27th
— Kaushik LM (@LMKMovieManiac) August 17, 2019
சமீபத்தில் வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை இந்த ஸ்டைலில் தான் ஹிட் அடித்தது. வியாழன், வெள்ளி ரசிகர்கள். சனி மற்றும் ஞாயிறு வேலைக்கு செல்பவர்கள் டார்கெட். அதன் பின் (ஆகஸ்ட் 15 விடுமுறை நாள் திங்கள் முதல்) பேமிலி ஆடியன்ஸ் என கூட்டம் வர ஆரம்பித்தது. எனவே இதே போல வியாழன் ரிலீஸ் செய்யவது பிகில் டீம்மின் வெற்றிக்கு தாரக மந்திரமாகவும் அமையக்கூடும்.
