Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் படத்தில் விஜய் ரோலுக்கு இவர் தானுங்க இன்ஸ்பிரஷன்.. ஒரு அலசல் பார்வை

அட்லீயும் கதை சர்ச்சையும் என தலைப்பு வைத்து படமாக எடுத்தால், அதுவே 100 நாட்கள் ஓடும் என கோலிவுட்டில் கிண்டல் செய்யும் சூழல் ஏற்பட்டுவிட்டது. ஒரு காலகட்டத்தில் 7 ஸ்வரங்கள் தானே உள்ளது என நம் இயக்குனர் சொல்ல, அப்போதையை ட்ரெண்டிங் விஷயம் அது.

ட்ரைலர் வெளியானதுமே ஹிந்தியில் ஷாருக்கானின் “சக் தே” இந்தியா ரிமேக் என்றனர். கே பி செல்வா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் தனது கதையை சமர்பித்ததும் நாம் அறிந்த விஷயமே. அடுத்ததாக நந்தி சின்ன குமார் என்பவர் காபிரயட் மீறல் என விசில் படம் பற்றி அக்டோபர் 16 தெலுங்கானா எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். Slum Soccer என்ற தனது படத்தினை ஒத்துப்போவதாக அவர் சொல்கிறார்.

இணையத்தில் சில விஷயங்களை பொறுமையாக தேடும் பட்சத்தில் கிடைத்த சில தகவல்களின் தொகுப்பே இந்த பதிவு ..

அகிலேஷ் பால் – இவரை மையப்படுத்தி தான் இந்த குறும்படம். நாக்பூரில் சேரி பகுதியில் பிறந்தவர். இவரது அப்பா அரசு மருத்துவமனையில் பியூன். இரண்டு அக்காள்களுடன் இவரது குடும்பம் அஞ்சனி சுற்றியுள்ள பகுதியில் வசித்து வந்துள்ளனர். குடும்பம் நடத்துவதே கஷ்டமான சூழலில் தனது 8 வயதிலேயே சிகிரெட், சூது என இறங்கிவிட்டாராம் அகிலேஷ். 6 ஆம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு ஏரியா பசங்களுடன் சேர்ந்து திருடுவது, ரியல் எஸ்டேட் ஆட்களுக்கு கைக்கூலி போல ரவுடித்தனம் செய்ய ஆரம்பித்துள்ளார். 45 வழக்குகள் அவர் மேல் உள்ள லோக்கல் ரவுடி அவர்.

இந்த சூழலில் இவர் வாழ்க்கையை மாற்றியது விஜய் பார்சே என்பவர். அங்கிருந்த பசங்களை கூப்பிட்டு விளையாட கால்பந்தை கொடுத்துள்ளார். அவர்கள் பணம் கேட்க, ஒருவருக்கு தலா ஐந்து ருபாய் கொடுத்துள்ளார். இது போல 15 நாட்கள் செய்துவிட்டு, பின்னர் என்னிடம் காசு இல்லை என சொல்லிவிட்டு பால் கொடுக்க மறுத்துள்ளார். இந்த நாட்களில் அந்த பாய்ஸ் பின்னர் பேப்பர், துணி எல்லாம் வைத்து பால் ஆடியுள்ளார்.

பின்னர் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் போலீஸ் தேட ஓடி ஒளிய முடியாமல் கோர்ட்டில் சரண்டர் ஆகியுள்ளார் அகிலேஷ். பின்னர் பாரில் வேலைக்கு சேர்ந்துள்ளார், அந்த பாரும் மூடிவிட என்ன செய்வது என திகைத்த நேரத்தில் தான் மீண்டும் பார்சே அவர்களின் slum soccer இல் இணைந்துள்ளார். கால்பந்தாட்டம் ஆட மீண்டும் துவங்கியுள்ளார்.

akhilesh yadav hwc

அதன் பின் கடின போராட்டம், பயிற்சி. பின்னர் 2009 இல் நடந்த Homeless World Cup இல் தேர்வானார். அந்த டீம்மின் கேப்டனும் இவர் தான். அதன் பின்னர் தான் இவர் இந்தியா வந்து கோச்சாக மாறினார். Living Hope என்ற NGO வில் வேலைக்கு சேர்ந்து சேரி, சிகப்பு விளக்கு பகுதியில் உள்ள சிறுவர்கள் என பலரும் கால்பந்தாட்ட பயிற்சி கொடுப்பதை முழு நேரமாக ஆரம்பித்துள்ளார்.

akhilesh

அமீர் கான் தொகுத்து வழங்கிய சத்யமேவ ஜெயதேவில் ஒரு எபிசோட் வந்தார். அதன் வாயிலாகவே இவர் மிகவும் பிரபலம் அடைந்தார். திருமணமாகி தன் மனைவி கவிதா மற்றும் மகன் இம்மானுவேலுடன் வசித்து வருகிறார் நம் நிஜ வாழ்க்கை ஹீரோ.

bigil

bigil

ஆகமொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால் ராயப்பன், மைக்கேல், பிகில் என மூவரினுள் கட்டாயம் இவரின் சாயல் இருப்பது போலவே தோன்றுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top