இளைய தளபதி விஜய் நடித்து நேற்று உலகம் முழுக்க வெளியான படம் பைரவா. விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதிஷ், மொட்டை ராஜேந்திரன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

கேரளாவில் சில தடைகளிருந்தாலும் அங்கிருந்த பல ரசிகர்கள் அதுகே உள்ள தமிழக மாவட்டங்களுக்கு வந்து சிரமத்துடன் படம் பார்த்துள்ளனர்.

மேலும் கேரளா ரசிகர்களுக்கு டிக்கெட்டை இரண்டு மடங்கு விலைக்கு விற்றதாகவும் புகார் எழுந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் பைரவா திரைப்படம் உலகம் முழுக்க முதல் நாள் மட்டும் 30 கோடி ரூபாய் தான் வசூலித்துள்ளதாம்.

நிறைய வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்நிலை மாறி வரும் சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் வசூல் அதிகமாகும் என்ற எதிர்பார்ப்புள்ளது.