பரதன் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கலன்று வெளிவரயிருக்கும் ‘பைரவா’ படம் தான் இப்போது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு.

விஜய்யின் நியூ லுக், மாஸ் காட்சிகள், ரசிக்க வைக்கும் பாடல்கள் என டிரைலரிலேயே அட்டகாசமாக இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களிடம் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதால் பல முன்னணி திரையரங்குகளில் பைரவா படத்துக்கான ஸ்பெஷல் ஷோக்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில்…அதிகாலை 1 மணிக்கு எல்லாம் ஸ்பெஷல் ஷோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதோடு ஸ்பெஷல் ஷோக்களுக்கான முன்பதிவு திறந்த சில மணிநேரங்களிலேயே முடிந்துவிட்டதாக பல திரையரங்குகள் தெரிவித்துள்ளன.