விஜய்யின் நடிப்பில் பொங்கலன்று வெளியான “பைரவா” மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முன் கேரளாவில் சில பிரச்சனைகள் இருப்பதால் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் பைரவா படம் வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் பைரவா படத்தை கேரளாவில் விநியோகம் செய்துள்ள Ifar International தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பைரவா படம் இன்றிலிருந்து மொத்தம் 302 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

பைரவா படம் 235 திரையரங்குகளில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 67 திரையரங்குகள் அதிகரித்து மொத்தம் 302 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தியேட்டர்கள் அதிகரித்திருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது, அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைக்க இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here