சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அதிமுகவுடன் தவெக கூட்டணி? எத்தனை தொகுதிகள் தெரியுமா? திமுகவை சாய்க்க வியூகம்!

தமிழகத்தில் இருபெரும் அரசியல் தலைவர்களாக ஜொலித்து வந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைந்த பின் அரசியலில் வெற்றிடம் நிலவுவதாக பலரும் கூறினர். இந்த விமர்சங்களைத் தவிடுபொடியாக்கி, அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, வந்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலினும், தற்போதைய துணை முதல்வராக உதய நிதி ஸ்டாலினும் இருக்கிறார்கள்.

முந்தைய அதிமுக ஆட்சி 10 ஆண்டுகளாக நீடித்த போதிலும் மக்களுக்கு என்ன திட்டங்கள், செய்து என்பதை ஆழமான கேள்வியாக முன் வைத்து பாஜக கூட்டணியுடன் அதிமுக இருந்தையே தனக்கு சாதகமாக திமுக பயன்படுத்தி, தேர்த்லில் ஜெயித்து.

அதிமுகவும் வரும் 2026 தேர்தலுக்கு நட்சத்திர பேச்சாளர்கள், கொள்பரப்பு செயலாளர் பதவிக்கு பிரபலமான நடிகர், நடிகைகளை நியமித்து வருவதாக கூறப்படும், நிலையில், சமீபத்தில் தவெக கட்சி தொடங்கி பிரமாண்டமான மாநாட்டையும் நடத்திய விஜயுடன் கூட்டணி வைக்க அதிமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

திமுகவை சாய்க்க அதிமுகவுடன் தவெக கூட்டணி?

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் ’திமுக மக்களை சுரண்டி வரும் வாரிசு கட்சி’ என மேடையில் முழக்கமிட்ட விஜய், பாஜவையும் சீண்டினார். எனவே, அதிமுகவை எதுவும் அவர் குறை கூறாத நிலையில் அடுத்த தேர்தலில் நிச்சயம் விஜய் கூட்டணி அமைக்கலாம் என தகவல் வெளியானது.

எனவே பலம் வாய்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால் தன் அரசியல் எதிர்காலத்துக்கும் வளர்ச்சிக்கும் அனுபவத்துக்கும் நல்லதாக இருக்கும் எனவும் செலவுகளுக்கும் அக்கட்சியே பார்த்துக் கொள்ளும் என்பதால், திமுகவை சாய்க்க, அதிமுக பக்கம் விஜய் சாயலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அன்படி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருவேளை விஜய்யின் தவெக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தவெகவுக்கு 80 தொகுதிகளை ஒதுக்க அக்கட்சி தயாராக இருப்பதாகவும் அதிமுக, மீதமுள்ள 144 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கினாலும், 124 தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயிக்கவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த தேர்தல்களில் ஜெயலலிதா, விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து அவரை எதிர்க்கட்சித் தலைவராக்கினார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதேபோல் , அரசியலில் பெரிய தலைவராக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் விஜய்யின் தவெகவுடனும் அதிமுக கூட்டணி அமைக்கும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் இளைஞர்கள், மக்கள் மத்தியில் விஜய்யின் அரசியல் வருகை பெரிதாகப் பேசப்படுகிறது. காசு கொடுக்காமலேயே தவெகவுக்கு கூட்டம் கூடுகிறது. எனவே விஜய்க்கு வரும் தேர்தலில் ஓட்டு வங்கி அதிகரிக்கும் என்பதால், அவரை தங்கள் கட்சியில் கூட்டணி அமைக்க பல முன்னணி தயாராகி வரும் நிலையில் அதில் அதிமுக முந்திக் கொள்ளும் என தெரிகிறது.

- Advertisement -

Trending News