தளபதி விஜய் மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படமான தளபதி62 படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இந்த படத்தின் பூஜை போட்டு படபிடிப்பையும் ஆரபித்துவிட்டார்கள்.

vijay

தளபதி 62 வில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், கத்தி, துப்பாக்கி தொடர்ந்து விஜயின்-62 வது படத்தையும் ஏ.அர்.முருகதாஸ் இயங்குகிறார்.

யோகி பாபு நடிக்கிறார் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. மெர்சலை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ஒளிப்பதிவாளராகப் கிரீஷ் கங்காதரன், ஆர்ட் டைரக்டராக சந்தானம், எடிட் செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத்.

தளபதி 62 படம் வருகிற தீவாளிக்கு திரையிட முடிவு செய்துள்ளார்கள் படக்குழு அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தோடு அஜித் படமும் சூர்யா படமும் வெளிவரும் என அறிவித்துள்ளார்கள்.நடிகர் விஜய் தற்பொழுது நடிக்கும் படங்கள் அனைத்தும் சமூக கருத்துள்ளபடங்களாகவே நடித்து வருகிறார்

அதிகம் படித்தவை:  விஜய் பட பாணியில் திருமணம் செய்து அசத்திய காதலர்கள்.. வியப்பில் ஆழ்ந்த ஊர் மக்கள்!!

தளபதி62 படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.மேலும் தற்பொழுது வனமகன் படத்தில் நடித்த நடிகை சாயிஷா சைகள் மற்றொரு நடிகையாக நடிக்க இருக்கிறார். என்ற தகவல் வந்துள்ளன.

இதற்க்கு முன் நடிகை சாயிஷா தான் தளபதி62 வில் நடிக்க இருந்தார் எனவும் கீர்த்தியால் தான் இந்த வாய்ப்பை இழந்ததாக அனைவரும் கூறி வந்தார்கள்.

Thalapathy Vijay

மேலும் இந்த படத்தில் நடிகை சாயிஷா சைகள் தளபதி62 படத்தில் இணைவது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை தந்துள்ளது. விஜய் ரொம்ப நாளாக அரசியல் வரவேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ஆசைபடுகிறார்கள்.

அதிகம் படித்தவை:  விஜய்-60யில் நடிக்கும் சர்ச்சை நாயகி

இவர் அரசியலுக்கு வந்தால் அனைத்து அரசியல் கட்ச்சிகளும் கிடுகிடுத்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது ரசிகர் மன்றங்கள் இயங்கி வருகின்றன.

vijay

இந்நிலையில் அவர்கள் அனைவரையும் ஓன்று சேர்க்க விஜய் ஒரு புதிய திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளார்  www.vijaymakkaliyyakam.in என்ற புதிய இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தான் ரஜினி தன் ரசிகர்களை கட்சியில் இணைப்பதற்காக ஒரு இணையத்தளம் துவங்கியது குறிப்பிடத்தக்கது.