மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 4 படங்கள்.. அதில் முதல் படம்தான் செம மாஸ்

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மணிவண்ணன். பின்னர், மணிவண்ணன் ஐம்பது படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். திரைப்படங்களில் துணை நடிகர் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். பல வெற்றி படங்களை இயக்கிய மணிவண்ணன், கேப்டன் விஜயகாந்த உடன் இணைந்து வெற்றி படங்கள் இயக்கியுள்ளார்.

நூறாவது நாள்: திருப்பதி பிக்சர்ஸ் தயாரிப்பில், மணிவண்ணன் இயக்கி 1984ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நூறாவது நாள். இப்படத்தில் விஜயகாந்த், நளினி, சத்யராஜ், மோகன் என பலரும் நடித்திருந்தார்கள். இப்படம் சீரியல் கொலை, திரில்லர் என ரசிகர்களை எதிர்பார்ப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய படம். இப்படத்தில் சத்யராஜ், ஜெயராமன் கதாபாத்திரத்தில் ஒன்பது பேரைக் கொன்று சுவரில் புதைத்து வைத்து இருப்பார்.

இப்படம் சத்யராஜ் சிறந்த வில்லனாக பிரதிபலிக்கபட்டது. மோகன் இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் குறைந்த செலவில், 12 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

ஜனவரி 1: மணிவண்ணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜனவரி 1. இப்படத்தில் விஜயகாந்த், சுலோச்சனா, தாரா, சத்யராஜ் என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விஜயகாந்த் போலீஸ் ஆகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்த த்ரில்லர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

உள்ளத்தில் நல்ல உள்ளம்: விஜயகாந்த் நடிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் 1988ல் வெளிவந்த திரைப்படம் உள்ளத்தில் நல்ல உள்ளம். இப்படத்தில் ராதா, சார்லி, ஜனகராஜ், செந்தில், ராதாரவி என பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். மைக்கேல் ராஜ் ஆக விஜயகாந்தும், போலீஸ் ஷீலாவாக ராதாவும் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இவர்களது ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

vijayakanth-manivannan-movie
vijayakanth-manivannan-movie

சந்தன காற்று: செங்கமலம் மணிவண்ணன் தயாரிப்பில் 1990ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்தன காற்று. இப்படத்தில் விஜயகாந்த், கௌதமி, சரத்குமார், காந்திமதி, வினுசக்கரவர்த்தி என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார். பல திருப்பங்களுடன் நகரும் இப்படத்தில் விஜயகாந்த் ராணுவ அதிகாரியாகவும், அவரது மனைவி ராசாத்தி ஆக கௌதமி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வெற்றி பெற்றது.

Next Story

- Advertisement -