விஜய் தேவர்கொண்டா

தெலுங்கு சினிமா என்ற வரையறையை தாண்டி இந்தியா முழுவதும் ரீச் உள்ள மனிதர். இதுவரை இரண்டு படங்கள் தான் ரிலீஸாகியுள்ளது. பெல்லி சூப்புலு படம் இவருக்கு நல்ல என்ட்ரி என்றால், அர்ஜுன் ரெட்டி தான் பிரேக் த்ரூ கொடுத்தது. அடுத்ததாக டாக்ஸிவாளா என்ற படமும், நடிகை சாவித்திரியின் பயோபிக்கான ‘நடிகையர் திலகமும்’ ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் விஜய்.

Mahanathi

மனதில் பட்டத்தை பளீச்சென்று பேசுபவர் இவர். சமீபத்தில் நடிகை சாவித்திரியை “கூல் சிக்” என்ற இவரின் ட்வீட் நெட்டிசன்களால் விவாதப்பொருளானது. விஜய் தேவர்கொண்டா மன்னிப்பு கேக்க வேண்டும் என்றும் ஒரு சாரார் கூற தொடங்கினர்.

இது போன்ற எதிர்மறை விமர்சங்களுக்கு பதில் விளக்கமும் தந்தார் விஜய் . “சாவித்திரி பல விஷயங்களின் சங்கமம். பயமரியாதவர், தாராள மனம் கொண்டவர், மேலும் தன் கனவுகளை முதன்மை படுத்தி உழைத்தவர். அனைவரிடமும் அன்பு செலுத்தியவர், பிறர் அன்புக்கு அடிபணிபவர். அதன் பிறகு தான் சூப்பர் ஸ்டார்.நான் நினைப்பது என்ன வென்றால், மகிழ்ச்சியாக அவர் என் பாராட்டை ஏற்றுக்கொள்வர், நீங்கள் சொன்னதுக்கு இது எவ்வளவோ மேல்.”

இதோடு முடித்துக்கொள்ளாமல், மேலும் ஒரு படி சென்று, நான் என்ன போஸ்ட் போடா வேண்டும் என்று நினைப்பவர்கள், அட்மின் வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். அந்த வகையில் உங்களுக்கு வேலையாவது கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.