Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்த கேப்டனாக உருவெடுத்த விஜயகாந்தின் மகன்.. பட்டையை கிளப்பும் நியூ லுக்!
கோலிவுட்டில் ரஜினிகாந்த், கமலஹாசன் என மாறி மாறி ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் விஜயகாந்த்.
மேலும் தமிழகத்தில் விஜயகாந்த் கருப்பாக இருந்தாலும் தனது நடிப்பால் பெரிய ரசிகர் கூட்டத்தை தனக்கென சொந்தமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு மட்டுமில்லாமல், போலீஸ் ஆபீஸர் என்று ஆரம்பித்தாலே நம் கண்முன் வந்து நிற்பது விஜயகாந்த்தான். அந்த அளவிற்கு போலீஸ் ஆபீஸர் கெட்டப்பிற்கும், இவருக்கும் இடையே தொடர்பு உள்ளது.
மேலும் சினிமா துறையில் பெற்ற வெற்றியை தொடர்ந்து விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து, அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அச்சு அசலாக விஜயகாந்த் போலவே இருக்கும் அவருடைய மூத்த மகனான விஜய பிரபாகரனின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது விஜய பிரபாகரன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், அவர் கருப்பு வெள்ளை படங்களில் எண்பதுகளில் கலக்கிய விஜயகாந்த் போல் அச்சு அசலாக இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் பலர், ‘அப்படியே அப்பாவ பாக்குற மாதிரியே இருக்கு’ என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
