Connect with us
Cinemapettai

Cinemapettai

என்னை மகனாக நினைத்து எந்த உதவியும் கேளுங்க.. சுபஶ்ரீயின் பெற்றோரிடம் உருகிய விஜய பிரபாகரன்

vijaya-prabhakaran

Politics | அரசியல்

என்னை மகனாக நினைத்து எந்த உதவியும் கேளுங்க.. சுபஶ்ரீயின் பெற்றோரிடம் உருகிய விஜய பிரபாகரன்

என்னை மகனாக நினைத்து எந்த உதவி என்றாலும் கேளுங்கள். எந்த நேரத்திலும் அழைத்தாலும் உதவி செய்கிறேன் பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ பெற்றோரிடம் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உருக்கமாக பேசினார்.

பேனர் விழுந்த விபத்தில் பலியான சுபஸ்ரீயின் வீட்டிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று மாலை வந்து ஆறுதல் தெரிவித்தார் . சுபஸ்ரீ தந்தை ரவி தாய் கீதா ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்த விஜய பிரபாகரன் அவர்களிடம் உணர்ச்சி பொங்க பேசினார் .

நான் வந்ததில் அரசியல் இல்லை சுபஸ்ரீ இழப்பு என்னை மிகவும் பாதித்தது . எனக்கு 27 வயதாகிறது. என்னை உங்கள் மகனாக நினைத்து எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் எந்த நேரத்திலும் செய்து தருவேன் என்றார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன் ஒரு உயிரை இழந்து சுபஸ்ரீ குடும்பம் வேதனையில் உள்ளது. இந்த விபத்திற்கு காரணமாணவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top