விஜயகாந்த் மகனை போய் பிச்சை எடு என்ற ரசிகர்.. விஜய பிரபாகரன் கொடுத்த தரமான பதிலடி

சமூக வலைதளங்களில் நாளுக்குநாள் பிரபலங்களிடம் ரசிகர்கள் மரியாதையின்றி பேசுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகர் இனிமேல் கிடைக்க வாய்ப்பே இல்லை என பெயர் எடுத்தவர்தான் விஜயகாந்த். அள்ளிஅள்ளிக் கொடுத்த நடிகர்களில் மிக முக்கியமானவர்.

எனக்கு வாழ்க்கை கொடுத்த தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை எதிர்க்கட்சி அளவுக்கு வளர்த்தார். ஆனால் தற்போது சொல்லிக்கொள்ளும்படி அந்த கட்சி இல்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சராசரிக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றது அந்த கட்சி. அதற்கு காரணம் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது தான் எனவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை விஜயகாந்தின் இளைய மகன் விஜயபிரபாகரன் பார்த்துக் கொண்டிருக்கிறார். பிரச்சாரங்களுக்கு செல்வது, கட்சி வேலைகள் என அனைத்தையும் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய பிரபாகரன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதைப்பார்த்த டென்ஷனான ரசிகர் ஒருவர், டெபாசிட் கூட வாங்கல, எதுக்கு இந்த வெட்டி சீனு, போய் பிச்சையெடுத்து பிழைக்கலாம் என்று கூறினார்.

இதற்கு விஜய பிரபாகரன், உங்கள் கருத்துக்கு நன்றி, அரசியலில் பிச்சை எடுத்து பிழைத்திருந்தால் இந்நேரம் நாங்க வேற லெவல் எனக் கூறியிருக்கிறார். இந்த பதிவு தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

vijayaprabhakaran-insta-reply-goes-viral
vijayaprabhakaran-insta-reply-goes-viral
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்