நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், சைத்தான் படத்தின் ட்ரெய்லரில் வரும் பாடலாசிரியர் அண்ணாமலை எழுதிய வரிகளில் சில சமஸ்கிருத மந்திரம் ஒன்றின் சாயலை ஒட்டி இருப்பதால் சிலர் மன வருத்தத்திற்கு ஆளாகியிருப்பதாக அறிந்தேன். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த வரிகளை உடனடியாக மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளேன். புதிய வரிகளுடன் பாடல் பதிவு செய்து ட்ரெய்லரை மீண்டும் வெளியிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ஆன்ட்டனியை பாராட்டுகிற அதே நேரத்தில், அவரது மனிதாபிமானத்திற்கு உதாரணமாக இன்னொரு விஷயத்தையும் இங்கு பதிவு செய்ய வேண்டும். பாடலாசிரியர் அண்ணாமலைக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர் விஜய் ஆன்ட்டனிதான். அண்ணாமலை இறந்தவுடன், அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை அங்கேயே இருந்து தன் இரங்கலை தெரிவித்திருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. அதுமட்டுமல்ல, அவரது குடும்பத்தினருக்கு மிகப்பெரிய உதவி ஒன்றையும் செய்வதாக கூறிவிட்டு வந்திருக்கிறார்.

வாழ்க விஜய் ஆன்ட்டனி!