மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய விஜயகாந்த்... தொண்டருக்கு ‘பளார்’ - யாருக்கும் பயப்படமாட்டேன் எனவும் ஆவேசம் - Cinemapettai
Connect with us

Cinemapettai

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய விஜயகாந்த்… தொண்டருக்கு ‘பளார்’ – யாருக்கும் பயப்படமாட்டேன் எனவும் ஆவேசம்

News | செய்திகள்

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய விஜயகாந்த்… தொண்டருக்கு ‘பளார்’ – யாருக்கும் பயப்படமாட்டேன் எனவும் ஆவேசம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனநிலையை நம்மால் மட்டுமல்ல, அவரது தொண்டர்களாலையே புரிந்து கொள்ள முடியாது என்ற நிலை நிலவி வருகிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு சர்ச்சை தமிழகத்தில் ஒருபுறம் நிலவுகிறது என்றால், மறுபுறம் பொதுமக்களிடமும், தொண்டர்களிடமும் விஜயகாந்த் செய்யும் திடீர் ஆவேசங்கள் மறுபுறம் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

சினிமா படங்களில் அடிதடிக்கு பேர் போனவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சினிமா வாழ்கையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தானாம்.

செய்திகளில் வரும் பேட்டிகளில் பலமுறை பார்த்திருப்போம், தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ, நான் யாருக்கும் பயப்படமாட்டேன், அநியாயம் எங்கு நடந்தாலும் இந்த விஜயகாந்த் அங்க வந்து நிர்ப்பான், இதெல்லாம் நிஜ வாழ்கையில் அவரை பிரபல படுத்திய வசனங்கள்.

இந்நிலையில், பண்ரூட்டி நிகழ்ச்சி ஒன்றில் விஜயகாந்த் தொண்டரை அவரது மனைவி குழந்தைகள் முன்பு அடித்துள்ளார்.

தேமுதிக சார்பில் உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், தொண்டர்களை சந்தித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும். பின்னர் விஜயகாந்துடன் சேர்ந்து தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வர்.

நேற்று உங்களுடன் நான் நிகழ்ச்சி, சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட ஊர்களில் நடந்தது. சிதம்பரத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, பண்ருட்டி காடாம்புலியூரில் ஒரு திருமண மண்டபத்தில்’உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலை 5 மணியளவில் விஜயகாந்த் வந்தார்.

அங்கு விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை ஒழுங்கப்படுத்தச் சொல்லிவிட்டு, விஜயகாந்ந் அங்கிருந்த அறை ஒன்றுக்கு சென்றுவிட்டார்.

பின்னர், கூட்டம் ஓரளவுக்கு கட்டுபடுத்திய பின், விஜயகாந்த் மேடைக்கு வந்து தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது தொண்டர் ஒருவரை விஜயகாந்த் அவரது மனைவி குழந்தைகள் முன்பு பளார் பளார் என அடித்தார்.

அடித்த சில நிமிடங்களிலேயே அந்த தொண்டருடன் சிரித்துப் பேசினார். தொண்டரும் அடிவாங்கியதை மறந்து சிரித்துப் பேசி, புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

இதுதான் தலைவருக்கு வாடிக்கையாகி விட்டதே என்று தொண்டர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லையாம்…

https://youtu.be/Y0my0h350zk

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top