வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜயால் லோகேஷ் கனகராஜுக்கு வந்த தலைவலி.. எல்லாத்தையும் தளபதி முடிவு செய்வதால் அதிருப்தியில் LCU

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்சில் உருவாகி வரும் இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனிடையே இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது.

மைனஸ் டிகிரி குளிரில் லியோ படத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் காஷ்மீர் குளிரால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், அதையும் மீறி லியோ படத்தின் ஷூட்டிங் எப்படி நடந்தது உள்ளிட்டவற்றை வீடியோ பதிவு மூலமாக அப்படக்குழு இணையத்தில் வெளியிட்டது. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது எனலாம்.

Also Read: சூப்பர் ஸ்டார்- லோகேஷ் கூட்டணிக்கு வலு சேர்க்கும் பிரபல இசையமைப்பாளர்.. கடும் போட்டி போடும் தயாரிப்பாளர்கள்

இதனிடையே தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களில், கதைகளில் அவர்களின் தலையீடு பெருமளவு அண்மைக்காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய்யும் லோகேஷ் கனகராஜிடம், லியோ படப்பிடிப்பில் பல மாற்றங்களை செய்ய சொல்லி வலியுறுத்தி வருகிறார்.

லோகேஷ் கனகராஜின் ஸ்டைலாக கருதப்படும் இரவு காட்சிகளை லியோ படத்தில் பெருமளவு எடுக்காமல் பகலிலேயே இயக்குமாறு விஜய், லோகேஷிடம் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவிக்காத லோகேஷ், விஜய் சொன்னதை போல கதையில் சில மாற்றங்களை செய்தார். இதனிடையே அடுத்தபடியாக வந்த விஜய்யின் தலையீடு, லோகேஷ் கனகராஜை தலையை பிச்சிக்க வைத்துள்ளது.

Also Read: லோகேஷ்-க்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 5 படங்கள்.. 10 முறைக்கு மேல் பார்த்த கமலின் மூன்று படங்கள்

தற்போது லியோ படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் உள்ள விஜய்யின் வீடு மற்றும் பிரசாத் ஸ்டுடியோவில் மட்டுமே நடைபெற்று வருகிறது. மேலும் லாங் ஷாட், மற்றும் சேசிங் சீன்களை எடுக்க வெளியில் செல்ல விஜய்யிடம் லோகேஷ் கனகராஜ் அணுகியுள்ளார். ஆனால் இதற்கு விஜய் மறுப்பு தெரிவித்துள்ளதால் லோகேஷ் கனகராஜ் என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி வருகிறார்.

காஷ்மீரில் பட்ட சங்கடத்தால் விஜய் வெளியில் சென்று ஷூட்டிங் வேண்டாமென கூறியுள்ளார். இருந்தாலும் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான மாநகரம், கைதி, விக்ரம் உள்ளிட்டவை முழுக்க முழுக்க யாருடைய தலையீடும் இல்லாமல் நடந்தது. ஆனால் லியோ படத்தில் விஜய்யின் தலையீடு அதிகமாக உள்ளதால், இப்படம் லோகேஷ் கனகராஜ் நினைத்தது போல வருமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக கோலிவுட் வட்டாரத்தில் பெருமளவு பேசப்பட்டு வருகிறது.

Also Read: ரோலக்ஸை ஓவர்டேக் செய்ய லியோவில் களமிறங்கும் தனுஷ்.. மிரட்ட வரும் லோகேஷ்

- Advertisement -

Trending News