வசூலை வாரிக்குவித்த கேப்டனின் 6 படங்கள்.. தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சேதுபதி IPS

கேப்டன் விஜயகாந்த் ஆரம்ப காலங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பின் வில்லன் கேரக்டர்களில் நடித்தார். விஜயகாந்த் நடித்த ‘தூரத்து இடி முழக்கம்’ திரைப்படம் கோலிவுட்டில் இவரை ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்தியதோடு, நல்ல ரீச்சையும் கொடுத்தது. “சின்ன கவுண்டர்’ போன்ற கிராமத்து படங்களாக இருந்தாலும், ‘கேப்டன் பிரபாகரன்’ போன்ற அதிரடி படங்களாக இருந்தாலும் சரி கேப்டன் பர்பார்மன்ஸில் பட்டையை கிளப்பி விடுவார். விஜயகாந்தின் சினிமா கேரியரில் வசூலை வாரிக்குவித்த 6 படங்கள்,

செந்தூர பூவே: 1988 ஆம் ஆண்டு நிரோஷா மற்றும் ராம்கி நடித்த செந்தூர பூவே திரைப்படத்தில் விஜயகாந்த் கேப்டன் சௌந்தர பாண்டியாக நடித்திருந்தார். இந்த படம் அந்த காலகட்டத்திலேயே இளம் விதவையின் மறுமணத்தை பற்றி பேசி இருந்தது. செந்தூர பூவே படத்தின் மொத்த வசூல் 2.5 கோடி ஆகும்.

Also Read: அப்பொழுது தாறுமாறாக ஓடி ஹிட் ஆனா திரைப்படத்தை தவறவிட்ட விஜயகாந்த்.! என்ன திரைப்படம் தெரியுமா

கேப்டன் பிரபாகரன்: 1991 ஆம் ஆண்டு ரிலீசான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் விஜயகாந்தின் 100 வது படம் ஆகும். இந்த படத்திற்கு பின் தான் இவருக்கு கேப்டன் என்னும் புனைப்பெயர் வந்தது. இந்த படம் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக கொண்டது. 100 நாட்களுக்கு மேல் திரையில் ஓடி வசூல் வேட்டை செய்தது.

மாநகர காவல்: இந்திய நாட்டு பிரதமரை படுகொலையிலிருந்து காப்பாற்றும் காவல் அதிகாரியாக விஜயகாந்த் நடித்த திரைப்படம் மாநகர காவல். இந்த படம் 1991 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் இந்திரா காந்தியாக நடிகை லட்சுமி நடித்திருப்பார். கேப்டன் பிரபாகரனை தொடர்ந்து ரிலீசான இந்த படம் விஜயகாந்திற்கு அடுத்தடுத்த வெற்றிப்படமாக அமைந்தது.

Also Read: விஜயகாந்த் நடிப்பில் வெளிவராத ஒரே படம்.. பொருளாதாரத்தால் வீழ்ந்த சூழ்ச்சி

சேதுபதி ஐ.பி.எஸ்: இயக்குனர் பி.வாசு இயக்கதில் விஜயகாந்த் நடித்து 1994 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் சேதுபதி ஐ.பி.எஸ். இந்திய நாட்டிலிருந்து தப்பிக்க நினைக்கும் தீவிரவாதிகள், ஒரு பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களையும், ஆசிரியர்களையும் பிணைக்கைதிகளாக வைத்து விமானத்தையும், பயணத்திற்கு தேவையான பணத்தையும் கேட்டு மிரட்டுவார்கள். விஜயகாந்த் அவர்களின் சதியை முறியடித்து குழந்தைகளை காப்பாற்றுவார்.

சின்ன கவுண்டர்: இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் சின்ன கவுண்டர். இந்த படத்தில் விஜயகாந்துடன் சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். 100 நாட்களை கடந்து இந்த படம் ஓடியது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சின்னராயுடு என்ற பெயரில் தெலுங்கிலும் சிக்கெசமான்ரு என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

ரமணா: கேப்டன் விஜயகாந்த் கேரியரில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது ரமணா திரைப்படம் தான். ஊழலை முற்றிலும் ஒழிக்க முயற்சிக்கும் ரமணா என்ற சாதாரண மனிதரின் கதை. இந்த படம் இன்றளவும் மக்கள் ரசிக்கும் படமாக இருக்கிறது. இந்த படத்தின் மொத்த வசூல் 34 கோடி.

Also Read: விஜயகாந்தை மாடர்னாக மாற்றிய நடிகை.. கடைசிவரை நிறைவேறாத காதல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்