கேப்டன் தனக்கு சினிமாவில் ஒரு வாரிசு வேண்டும்  என்கிற கனவில் மகன் சண்முகப் பாண்டியனை களம் இறக்கினார். முதல் படமாக அவரை வைத்து  சகாப்தம் என்ற படம் எடுத்தார்.

ஆனால்  அந்தப் படத்தின் இயக்குனரை உண்டு இல்லை என்று பண்ணினார் கேப்டன்.தானே இயக்குனர் போல ஷூட்டிங் ஸ்பாட்டில்  உட்கார்ந்துகொண்டு இயக்கவும் செய்தார். இதனால் அந்த படத்தின் இயக்குனர் விட்டால் போதும் என்று எஸ்கேப் ஆனார்.

படம் வெளியாகி பலத்த கேலிக்குரிய நடிகர் ஆனார் கேப்டன் மகன் சண்முகப் பாண்டியன். படமும் படு தோல்வி அடைந்தது. நெட்டிசன்கள் இன்று வரை சகாப்தம் படத்தைக் கழுவக் கழுவி ஊற்றுகிறார்கள்.

இப்போது ‘மதுர வீரன்’ என்ற  அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டார். பூ,அவள் பெயர் தமிழரசி போன்ற படங்களின் ஒளிபத்திவாளர் பி.ஜி. முத்தையா தான் இந்த மதுர வீரன் படத்தின் இயக்குனராகி விட்டார்.

ஆனால் அவரின் பயம் இந்தப் படத்திலும் கேப்டன் புகுந்து ஊமைக் குத்து குத்துவாரோ என்று தான். இதை சண்முகப் பாண்டியனும் புரிந்து கொண்டார்.அப்பாவை அழைத்து “நான் சினிமாவில் ஜெயிக்கணும்னா நீங்க ஷூட்டிங் நடக்குற ஏரியாவிற்கே வரக்கூடாது.

படம் முடிந்து போட்டுக் காட்டுவோம் அப்போது தான் நீங்க வரணும்..எப்படி வசதி” என்று கேட்க. நொந்து போன கேப்டன் “சரி மகனே நான் வரலை” என்று கூறி ஒதுங்கிக் கொண்டாராம்.

எப்படியோ சண்முகப் பாண்டியன் ஜெயிச்சா சரி..!