fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தவசி படம் தோல்வியா.? ஷாக்காண ரகசியத்தை போட்டு உடைத்த தயாரிப்பாளர்

vijayakanth

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தவசி படம் தோல்வியா.? ஷாக்காண ரகசியத்தை போட்டு உடைத்த தயாரிப்பாளர்

2001-ல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் நன்றாக ஓடிய படம் தவசி. கேப்டன் விஜயகாந்த் சௌந்தர்யா நடிப்பில் இரட்டை வேடத்தில் விஜயகாந்த் அப்பா மகன் கேரக்டரில் அசத்தி இருப்பார். வடிவேலுவின் காமெடி இப்படத்தில் ஒரு முக்கிய அம்சமாக இருந்திருந்தது.

விஜயகாந்த் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படமான இந்த படமோ வியாபார ரீதீயில் படுதோல்வி கண்டதாம். அத்தனை எளிதில் யாரும் நம்பிவிட முடியாது இந்த படமா தோல்வி கண்டது என்று.

என்னதான் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய படமாக இருந்தாலும். படத்தின் தயாரிப்பாளர்களுக்கோ இப்படம் எந்த பலனும் தரவில்லை என குறிப்பிடுகிறார் தயாரிப்பாளர் ஞானவேலு.

v gnanavel

v gnanavel

90களில் சிறு பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஞானவேல். இப்படத்தில் தோல்வி அடைவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை எங்களைதான் குறை சொல்ல வேண்டும் என்றும் நன்றாக படமாக்கி கொடுத்த அணியிடமிருந்து படத்தை தியேட்டரில் சேர்ப்பது எங்கள் பொறுப்பு தவறு நடந்ததே அங்கு தான் என்றும் எங்களுக்கு அந்த அளவிற்கு படத்தை சரியாக வியாபாரம் செய்ய தெரியவில்லை என்றும் கூறினார்.

இப்போதைய நிலைக்கு அப்படி ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படம் எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்தால் எப்படி வியாபாரம் செய்வது என்பதனை கற்றுக்கொண்டோம் என்றும் கூறினார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top