புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பொட்டு வச்ச தங்க குடம் பாடலால் விஜயகாந்த் மகனுக்கு வந்த தலைவலி.. லப்பர் பந்தால் பரிதவிக்கும் சண்முக பாண்டியன்

1989ஆம் ஆண்டு இயக்குனர் பி. வாசு விஜயகாந்தை வைத்து இயக்கிய படம் பொன்மனச் செல்வன். இந்த படம் அப்பொழுதே அதிரி புதிரி ஹிட்டானது. குடும்பங்கள் கொண்டாடிய படமாக இது அமைந்தது. இந்த படத்தில் இளையராஜா போட்ட ஒரு பாடல் தற்போது லப்பர் பந்து படத்தில் இடம்பெற்று மீண்டும் செம ஹிட் ஆனது.

பொட்டு வச்ச தங்க குடம் என்ற பாடலை லப்பர் பந்து பட குழுவினர் யாரிடமும் அனுமதி கேட்காமல் பயன்படுத்தி விட்டார்கள். இந்த பாடல் ஒலிக்கும் காட்சிகள் அனைத்தும் படத்துக்கு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. இந்த படத்தின் ஹீரோ அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாடும் பொழுது இந்த பாடல் ஒளிபரப்பப்படும்.

யாரிடமும் அனுமதி கேட்காததால் விஜயகாந்தின் வாரிசு சண்முக பாண்டியனுக்கு தான் இப்பொழுது தலைவலி ஆரம்பித்துள்ளது. இவர் நடிப்பில் இயக்குனர் அன்பு உருவாக்கிய படம் படைத்தலைவன். இந்த படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. கடந்த ஓராண்டாக படத்தை எடுத்து வருகிறார்கள்.

படைத்தலைவன் படத்தில் சமூக பாண்டியன் நடித்து வந்த சண்டைக் காட்சிகளில் பின்னணி இசை இல்லாமல் இதே பொட்டு வைத்த பாடலை பயன்படுத்தி உள்ளனர். அந்த சண்டைக்காட்சியும், இந்த பாடலால் மிகவும் அருமையாக அமைந்துள்ளது. இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் ஏற்கனவே இதே பாடல் காட்சி யாருக்கும் தெரியாமல், அனுமதி பெறாமல் லப்பர் பந்து படத்திலும் இடம் பெற்றுவிட்டது.

இதுதான் இந்த படத்திற்கு இப்பொழுது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த பாடல் பயன்படுத்தப்பட்டதால் இந்த சண்டைக் காட்சி எடுபடுமா என்பதை இப்பொழுது இயக்குனர் அன்பு மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் கடுமையாக யோசித்து வருகிறார்கள். லப்பர் பந்து படத்தில் அவர்கள் அனுமதி வாங்கி இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.

- Advertisement -

Trending News