Connect with us

Cinemapettai

பிறந்தநாள் விழாவில் திடீரென கீழே விழுந்த விஜயகாந்த்.. தொண்டர்கள் அதிர்ச்சி

vijayakanth-slipped

Politics | அரசியல்

பிறந்தநாள் விழாவில் திடீரென கீழே விழுந்த விஜயகாந்த்.. தொண்டர்கள் அதிர்ச்சி

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயகாந்த் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழா வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதனையொட்டி 100 க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளும், ஏழை எளிய மக்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பானும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே. சுதிஸ், பார்த்த சாரதி மற்றும் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் ,கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வந்ததை கண்டு தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பரிசு பொருட்களை எழுந்து நின்று கொடுக்க விஜயகாந்த் விருப்பப்பட்டார். ஆனால், அவரது விருப்பத்தை கேட்காத பிரேமலதா விஜயகாந்தை உட்கார்ந்து கொண்டே கொடுக்க நிர்பந்தித்தார். அதனையும் மீறி விஜயகாந்த் எழுந்து நின்று பரிசு பொருட்களை கொடுக்க எழுந்தபோது விஜயகாந்த் கீழே விழுந்தார்.

இதனால் பதட்டமாகி போன தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒரு வழியாக மேடையில் இருந்தவர்கள் விஜயகாந்தை தாங்கிப் பிடித்து கொண்டனர். இதனை பார்த்த பத்திரிக்கையாளர்களும், தொண்டர்களும் எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிவிட்டாரே.. என தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Politics | அரசியல்

அதிகம் படித்தவை

To Top