கட்சி அலுவலகத்திற்கு ன்று வந்திருந்தார் கேப்டன் விஜயகாந்த். மனிதர் முன்பு போல கம்பீரமாக மாறி நிமிர்ந்த நடையோடு காரில் வந்து இறங்க கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள். ஆரவாரம் செய்திருகின்றனர். தனது வழக்கமான புன்னகையுடன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.

அப்போது ஒரு தொண்டர்,  ‘தலைவா அந்த பொம்பளைப் போய் சேர்ந்துடுச்சு இனி நீங்கதான் முதல்வர்” என்று குரல் கொடுக்க நடந்தவர் சட்டென்று நின்று, அவனை கூட்டியாங்கப்பா  என்று உத்தரவிட கொத்தாகத் தூக்கி வந்தார் ஒரு நிர்வாகி.

இன்னிக்கு கன்னம் வீங்கப் போகிறது. என்று நடுங்கியபடி அந்தத் தொண்டர் பதற, அவர் தோளில் கை வைத்த கேப்டன்,”இங்க பார்..என்னை உயர்த்த வேண்டும் என்பதற்காக இறந்தவர்களை அவமதிப்பது தப்பு.

ஜெ.,அரசியல்ல எனக்கு சீனியர். எம்ஜிஆரோடு அரசியல் கத்துக்கிட்டவங்க. எனக்கு எம்ஜிஆர்,ஜெயலலிதா இருவருமே வழிகாட்டிகள்.

அரசியல்ல சண்டை வருவது இயல்புதான்”. என்று கூறிவிட்டு உள்ளே போனார். தொண்டர்களுக்கு பேச்சே வரவில்லை.

நியாயமானது தானே? கேப்டன் கேப்டன் தான்