Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜயகாந்த், ராதிகா திருமணம் நின்றதற்கு காரணம் இதுதான்! உண்மையை உடைத்த பிரபலம்
ஒரு காலத்தில் விஜயகாந்த் மற்றும் ராதிகா பற்றி வந்த வதந்திகள் அனைத்துமே உண்மைதான் என பிரபல இயக்குனர் ஒருவர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் ஆகியோருக்குப் பிறகு யாரும் இல்லை என எதிர்பார்த்திருந்த நேரத்தில் விஜயகாந்த் என்ற ஆளுமை அனைவரது மார்க்கெட்டையும் அசைத்துப் பார்த்தது.
ரஜினி, கமல் படங்களை விட அதிகமாக வசூல் செய்தது விஜயகாந்த் படங்கள். விஜயகாந்த் படங்களில் அவருக்கு பெரும்பாலும் ஜோடியாக நடித்தவர் ராதிகா தான்.
மேலும் கிராமத்து ஆளாக இருந்த விஜயகாந்தை ஸ்டைலிஷ் மன்னராக மாற்றியது ராதிகாதான் என அப்போதே செய்திகள் வெளிவந்தது.
விஜயகாந்த் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணம் நடக்க இருந்த நேரத்தில் பத்திரிகைக்காரர்கள் செய்த குழப்பத்தால் திருமணம் தடைபட்டதாம்.
இதனால் ராதிகா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜயகாந்த் கிடைக்காத விரக்தியில் ராதிகா தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

vijayakanth-radhika-cinemapettai
