வில்லனை புகழ்ந்து தள்ளிய விஜயகாந்த்.. டேய் அந்த படத்தில் நீதான்டா ஹீரோ?

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் சாம்ராஜ்யத்தை வைத்திருந்தவர் விஜயகாந்த். அப்போதெல்லாம் ரஜினி, கமல் ஹாசன் எல்லாம் விஜயகாந்திற்கு போட்டியே கிடையாது. 

விஜயகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்று திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல்  ஓடியுள்ளன. விஜயகாந்த்  படத்திற்கான வரவேற்பு  திருவிழாவைப் போல் இருக்கும்.

 எப்படி சினிமாவின் ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் ஹீரோவாக கலக்கினார். அதேபோல்  தன்னோடு வில்லத்தனத்தால் தமிழ் சினிமாவை ஆண்டவர் ஆனந்தராஜ்.

vijayakanth anandraj
vijayakanth anandraj

அப்போதெல்லாம் விஜயகாந்த் படம் என்றாலே அந்த படத்தில் ஆனந்தராஜ் இல்லாமல் இருக்க மாட்டார். அந்த அளவுக்கு  இவர்களது கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்  அடித்தன. குறிப்பாக புலன் விசாரணை, மாநகர காவல் மற்றும் ராஜதுரை படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 

மாநகர காவல் படத்தில் ராபின் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார் ஆனந்தராஜ். அந்த படத்தில் பிரைமினிஸ்டர் கொல்வதற்காக அனுப்பப்படும் உளவாளியாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

 சொல்லப்போனால் விஜயகாந்திற்கு  சரி சமமாக படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். படத்தை திரையரங்கில் பார்த்து விட்டு விஜயகாந்த் “டே இந்த படத்தில் நீ தான் ஹீரோ” என அப்போதைய ஆனந்தராஜை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

- Advertisement -spot_img

Trending News